சோபர்ஸ் ரன் குவிக்காமல் இருக்க கவாஸ்கரை கழிப்பறையில் அடைத்த வடேகர்!

கடைசி டெஸ்டின்போது சோபர்ஸ், எங்கள் ஓய்வறைக்கு வரும்முன்பு, வடேகர் என்னை கழிப்பறையில் வைத்துப் பூட்டினார்.
சோபர்ஸ் ரன் குவிக்காமல் இருக்க கவாஸ்கரை கழிப்பறையில் அடைத்த வடேகர்!
Updated on
1 min read

1971 மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது எனக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் இருந்ததால் அதிக ரன்கள் குவிக்க முடிந்தது என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் தொடக்க வீரர் மாதவ் ஆப்தேவின் சுயசரிதையை வெளியிட்டு பேசிய கவாஸ்கர் 1971 மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

‘ 1971 மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது எனக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் இருந்ததால் அதிக ரன்கள் குவிக்க முடிந்தது. நான் முதல் சதம் அடித்தபிறகு, இந்திய அணி மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் ஒன்றாக இருந்த சமயத்தில், கேரி சோபர்ஸ், என்னுடைய அதிர்ஷ்டம் குறித்து சீண்டினார். அதிர்ஷ்டம் இருந்ததால் தான் உன்னால் சதம் அடிக்கமுடிந்தது என்றார். பிறகு, நான் இப்போது உன்னைத் தொடப் போகிறேன் என்றார்.

அப்போது சோபர்ஸ் சரியாக ஆடாமல் இருந்தார். மேட்ச் நடக்கும் நாள்களில் தினமும் அவர் இந்திய அணியின் ஓய்வறைக்கு வருவார். அஜித் வடேகருக்கும் மற்றவர்களுக்கும் ஹலோ சொல்வார். பிறகு என்னைத் தொட்டுச் செல்வார். முதலில் ஒரு சதம் அடித்தார். அடுத்த மேட்சில் என்னைத் தொட்டுவிட்டுச் சென்று 78 ரன்கள் எடுத்தார்.

கடைசி டெஸ்டின்போது சோபர்ஸ், எங்கள் ஓய்வறைக்கு வரும்முன்பு, வடேகர் என்னை கழிப்பறையில் வைத்துப் பூட்டினார். இதனால் என்னை சோபர்ஸ் தொட்டுவிட்டுச் செல்லமுடியாது அல்லவா! அடுத்த நாள் முதல் பந்தில், ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் சோபர்ஸ்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com