இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் 3 தமிழர்கள்!

ஆனால் ஒருநாள் அணியில் ஒரு தமிழ்நாட்டு வீரருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான 3 நாள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது. 3 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு மூன்று நாள் போட்டியிலும் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16, 18, 20 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 27-29 வரை மூன்று நாள் போட்டியும் நடைபெறுகின்றன.

3 நாள் அணியில் அபினவ் முகுந்த், பாபா அபரஜித், விஜய் சங்கர் என மூன்று தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள். ஆனால் ஒருநாள் அணியில் ஒரு தமிழ்நாட்டு வீரருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

3 நாள் அணி: ஷிகர் தவன் (கேப்டன்), அபினவ் முகுந்த், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், பாபா அபரஜித், நமன் ஓஜா, ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், ரவிந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் கோபால், அபிமன்யூ மிதுன், வருண் ஆரோன், இஷ்வர் பாண்டே, ஷெல்டன் ஜாக்ஸன்.

ஒருநாள் அணி: உன்முக்த் சந்த் (கேப்டன்), மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரைனா, கெதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், கருண் நாயர், குல்தீப் யாதவ், ஜெயந்த் யாதவ், கரண் சர்மா, ரிஷி தவன், எஸ். அர்விந்த், தவல் குல்கர்ணி, ரஷ் கலரியா, குர்கீரத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com