இந்திய - வங்கதேச "ஏ' அணிகளிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்திய - வங்கதேச "ஏ' அணிகளிடையிலான அதிகாரப்பூர்வமற்ற மூன்று நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இந்திய - வங்கதேச "ஏ' அணிகளிடையிலான அதிகாரப்பூர்வமற்ற மூன்று நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கு இந்திய "ஏ' அணியை ஷிகர் தவண் வழிநடத்துகிறார். தவண், வங்கதேசம் மற்றும் இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்திருந்தார்.
கடந்த மாதம் காலேவில் (இலங்கை) நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது அவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 2 போட்டிகளிலிருந்து விலகினார். வரும் 2ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நடைபெறுகிறது.
ரவீந்திர ஜடேஜா:
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதை நிரூபிப்பதற்கு வங்கதேச "ஏ' அணியுடனான டெஸ்ட் போட்டி தவணுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். அதே வேளையில், தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இருந்த கழற்றிவிடப்பட்ட ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க, கடைசி நேரத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு இதுவாகும். அக்ஷர் படேல், வருண் ஆரோன், நமன் ஓஜா ஆகியோரும் தங்களது திறமையை நிரூபிக்க உள்ளனர். கருண் நாயர், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற திறமை வாய்ந்த இளம் பேட்ஸ்மேன்களும் பார்வையாளர்களை கவர உள்ளனர்.
வங்கதேச "ஏ' அணியைப் பொருத்த வரை, மைசூரில் நடந்தப் போட்டியில் ரஞ்சி சாம்பியனான கர்நாடகத்திடம் தோல்வி கண்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அதற்கு விமோசனம் தேடிக் கொள்ளும் முயற்சியில் மொமினுல் ஹக் தலைமையிலான அந்த அணி களம் காணுகிறது.
இந்திய "ஏ' அணி: ஷிகர் தவண் (கேப்டன்), அபினவ் முகுந்த், கருண் நாயர், ஸ்ரேயஸ் ஐயர், பாபா அபராஜித், நமன் ஓஜா, ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் கோபால், அபிமன்யு மிதுன், வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே, ஷெல்டன் ஜாக்ஷன்.
வங்கதேச "ஏ'அணி: அனாமுல் ஹக், ரோனி தாலுக்தர், லிட்டன் தாஸ், சப்பிர் ரஹ்மான், சௌமியா ஷர்க்கார், மொமினுல் ஹக், நசீர் ஹுசைன், சக்லைன் சாஜிப், அராஃபத் சன்னி, ரூபேல் ஹுசைன், ஷஃபியுல் இஸ்லாம், அல்-அமீன் ஹுசைன், ஷுவகட்டா ஹாம், ஜுபேர் ஹுசைன், கம்ருள் இஸ்லாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

