4-வது டெஸ்ட்: 139 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து இந்தியா திணறல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
4-வது டெஸ்ட்: 139 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து இந்தியா திணறல்

தில்லியில் இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

தொடர்ந்து நான்காவது முறையாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.  இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று சுழல்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்ட இந்திய அணி இந்த போட்டியில் இரண்டு பேருடன் இறங்கியது. அமித் ஷாவுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர், இரு வேகப்பந்து வீச்சாளர், இரு ஸ்பின்னர் என்ற முறையில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டெம்பா பௌமா, கைல் அபாட், டேன் பீயெட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியின் சார்பில் முரளி விஜய், ஷிகர் தவான் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்கோர் 30 ரன்களை எட்டியபோது, விஜய் பீயெட் பந்துவீச்சில் ஆம்லாவிலம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து களம் இறங்கிய புஜாராவும் நெடுநேரம் களத்தில் நிற்கவில்லை. அவர் 14 ரன்களுடன் நடையை கட்டினார்.  முன்னதாக ஷிகர் தவான் 33 ரன்களுக்கு வெளியேறினார்.

இதன்பின்னர் கேப்டன் கோலியும், ரஹானேவும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி 4 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்த போது, கோலி அவுட்டானார்.  அடுத்து வந்த ரோகித் சர்மாவும், விருத்திமான் சஹாவும் தலா ஒரு ரன்னுடன் நடையை கட்டினர். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 139 ரன்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடும் ஆப் ஸ்பின்னர் டேன் பீயெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com