அடித்து ஆடு: ராகுல் டிராவிடின் கட்டளையை நிறைவேற்றிய ‘சிக்ஸர்’ மோரிஸ்! (வீடியோ இணைப்பு)

ஐபிஎல் ஏலத்தின்போது கிறிஸ் மோரிஸை ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி. அதன் மதிப்பை நேற்று உணர்த்தியுள்ளார் மோரிஸ்.
அடித்து ஆடு: ராகுல் டிராவிடின் கட்டளையை நிறைவேற்றிய ‘சிக்ஸர்’ மோரிஸ்! (வீடியோ இணைப்பு)
Updated on
1 min read

ஐபிஎல் ஏலத்தின்போது கிறிஸ் மோரிஸை ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி. அதன் மதிப்பை அவர் தற்போது உணர்த்தியுள்ளார்.

மோரிஸ் ஆடவந்தபோது, 56 பந்துகளில் 116 ரன்கள் தேவைப்பட்டது. அவர் அசரவில்லை. 17 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஐபிஎல் போட்டியின் 3-வது அதிவேக அரை சதம் இது. ஆட்டம் முடிந்தபோது 32 பந்துகளில் 82 ரன்கள் குவித்திருந்தார். இருந்தபோதும் அவரால் வெற்றிக்கோட்டைத் தொடமுடியவில்லை. பிரவீன் குமாரும் பிராவோவும் கடைசி 2 ஓவர்களை மிக அருமையாக வீசி டெல்லி அணியின் வெற்றியைத் தடுத்தார்கள். 19-வது ஓவரில் பிரவீன் குமார் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தொடர்ந்து யார்க்கர்கள் வீசி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார் பிராவோ.  

6-வதாக ஆடவந்த மோரிஸ், 2-வது பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அதன்பிறகு ஒரே சிக்ஸர் மழைதான் (32 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள்!). தோல்வி குறித்து அவர் கூறியபோது: என்னால் வெற்றியைத் தரமுடியாதது குறித்து வருத்தம்தான். என்னால் பங்களிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி. அந்தத் தருணத்தில் நான் சிக்ஸ் அடிக்க நினைத்தபோதெல்லாம் செய்யமுடிந்தது. கடந்த சில மாதங்களாக அதிகமாகப் பயிற்சி எடுத்தேன். அதனால் தான் இப்படி ஆடமுடிந்தது. போட்டியின்போது ஆடச் செல்கையில், ராகுல் டிராவிடம் கேட்டேன், அடித்து ஆடு என்றார். இது என்னுடைய சிறந்த டி20 ஆட்டம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com