ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதலிடத்தில் ரெய்னா அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதலிடத்தில் ரெய்னா அணி!
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.

தில்லியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. ஆரம்பத்திலேயே அதிரடியில் இறங்கியது. ஜாகீர்கான் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டினார் டுவைன் ஸ்மித். 4 ஓவர்களில் 51 ரன்களை எட்டியது குஜராத். மெக்கல்லம் 27 பந்துகளில் அரை சதமடித்தார். அவரைத் தொடர்ந்து 26 பந்துகளில் அரை சதம் கண்டார் ஸ்மித். தொடக்க வீரர்களான டுவைன் ஸ்மித்-மெக்கல்லம் ஜோடி முதல் 10 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தபோதும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

பின்னர் ஆடிய டெல்லி அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் எதிர்பாராத தோல்வி கண்டது. டெல்லி அணியின் கிறிஸ் மோரிஸ் தனியாளாக களத்தில் நின்று 32 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்களை விளாசியபோதும் அந்த அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.

குஜராத் அணி 5-வது வெற்றியைப் பெற்றுள்ளது. டெல்லி அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த வெற்றியினால் 2-வது இடத்திலிருந்து 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குஜராத் அணி. டெல்லி அணி, தோல்வியடைந்தபோதும் 3-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்போட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள் நெட் ரன்ரேட்
குஜராத்65110+0.037
கொல்கத்தா5418+0.922
டெல்லி5326+0.244
ஹைதராபாத்6336-0.086
மும்பை7346-0.268
புணே6644+0.320
பெங்களூர்5234+0.230
பஞ்சாப்6152-1.174

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com