கடைசிப் பந்தில் சிக்ஸர்: ‘டை’ ஆன இங்கிலாந்து - இலங்கை ஒருநாள் போட்டி! (வீடியோ)

இங்கிலாந்து - இலங்கை இடையேயான ஒருநாள் போட்டி பரபரப்பான முறையில் டை ஆகி, இருதரப்புக்கும் வெற்றி, தோல்வியில்லாமல் முடிந்துள்ளது.
கடைசிப் பந்தில் சிக்ஸர்: ‘டை’ ஆன இங்கிலாந்து - இலங்கை ஒருநாள் போட்டி! (வீடியோ)
Updated on
1 min read

இங்கிலாந்து - இலங்கை இடையேயான ஒருநாள் போட்டி பரபரப்பான முறையில் டை ஆகி, இருதரப்புக்கும் வெற்றி, தோல்வியில்லாமல் முடிந்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் போட்டி, இங்கிலாந்து நாட்டிங்ஹமில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். பிரசன்னா 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து அணியின் இந்த ஸ்கோருக்கு மிகவும் உதவினார்.

பிறகு ஆடிய இங்கிலாந்து அணி, 30 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு 82 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தபோது இலங்கை வெற்றிபெறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் கிறிஸ் வோக்ஸும் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள். 99 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்த பட்லர், 43-வது ஓவரின் ஆட்டமிழந்தார். இதன்பிறகு 235 ரன்களின்போது 8-வது விக்கெட்டும் வீழ்ந்தது. 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற இன்னமும் 52 ரன்கள் தேவைப்பட்டதால், இலங்கை வீரர்கள் உற்சாகமானார்கள்.

ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோக்ஸும் லியாம் பிளங்கெட்டும் மனஉறுதியோடு ஆடினார்கள். கடைசி 4.2 ஓவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்டபோதும் இலங்கை பந்துவீச்சாளர்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார்கள். சரியான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்தார்கள். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டபோது ஆட்டம் மிகுந்த பரபரப்புக்கு ஆளானது. முதல் 5 பந்துகளைச் சரியாக வீசினார் இலங்கையின் பிரதீப். இதனால் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் மட்டுமே ஆட்டம் டை என்கிற நிலைமை உருவானது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்த எத்தனையோ அற்புதத் தருணங்கள் உள்ளன. அதில் ஒன்றாக பிளங்கெட், அட்டகாசமாக சிக்ஸர் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். வோக்ஸ் 95, பிளங்கெட் 22 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இலங்கை நிச்சயம் வெற்றி பெறும் என்கிற பல தருணங்கள் உருவானபோதும், அந்த அணியால் கடைசியில் வெற்றி பெறமுடியாமல் போனது துரதிர்ஷ்டம். கிறிஸ் வோக்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com