நியூயார்க்கில் 2016 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி! கார்ல்சனுடன் மோதுபவர் யார்?

நவம்பர் 11 முதல் 30 வரை நடக்கவுள்ள இந்தப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதப்போகிறவர் யார்?
நியூயார்க்கில் 2016 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி! கார்ல்சனுடன் மோதுபவர் யார்?
Updated on
1 min read

2016 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 11 முதல் 30 வரை நடக்கவுள்ள இந்தப் போட்டி, மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்டதாகும். இதில் 6.5 புள்ளிகளை எட்டும் வீரர் சாம்பியனாவார்.

நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்கும் மூன்றாவது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியாகும் இது. இதுவரை அவர் கலந்துகொண்ட இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மற்றும் ரஷ்யாவின் சூச்சி நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்து உலக சாம்பியன் ஆனார் கார்ல்சன்.

தற்போது உலக அளவிலான தரவரிசையில் கார்ல்சன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த கிராம்னிக் உள்ளார். ஆனந்த்துக்கு 12-வது இடமே கிடைத்துள்ளது. 14-வது இடத்தில் மற்றொரு இந்தியரான ஹரிகிருஷ்ணா உள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் (உலக சாம்பியன்ஷிப்புக்கான தகுதிச்சுற்று) போட்டியில் வெற்றி பெறுகிற வீரருடன் கார்ல்சன் மோதுவார். கேண்டிடேட்ஸ் போட்டி, மார்ச் 10 முதல் 30 வரை ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட 8 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com