கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்த் டிரா! தொடர்ந்து முன்னிலை!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 11 முதல் 30 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதவுள்ள மற்றொரு வீரரை தேர்வு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்த் டிரா! தொடர்ந்து முன்னிலை!
Updated on
2 min read

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 11 முதல் 30 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதவுள்ள மற்றொரு வீரரை தேர்வு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

இதில் விஸ்வநாதன் ஆனந்த், வெஸலின் டோபலோவ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, இத்தாலியின் ஃபாபியானோ கருணா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெஸலின் டோபலோவை தோற்கடித்தார். இரண்டாவது சுற்றில், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனுடன் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடி டிரா செய்தார். நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில், இத்தாலியின் ஃபாபியானோ கருணாவுடன் மோதினார். 

வெள்ளை நிறக் காய்களுடன் மோதிய ஆனந்த், ரய்லோபஸ் பெர்லின் டிபென்ஸ் முறையில் விளையாட வேண்டியிருந்தது. வெள்ளை நிறக் காய்களுடன் ஆனந்த் எப்போது விளையாடினாலும் தாக்குதல் ஆட்டத்தைக் கையாள்வார். ஆனால் கருணா தனது சிப்பாய்களை விரைவாக நடுகளத்துக்குக் கொண்டு வந்து ஆனந்தின் தாக்குதல் ஆட்டத்துக்கு வழிவிடாமல் செய்து வந்தார்.  முடிவில் யானை மற்றும் சிப்பாய்களை மட்டுமே கொண்ட இறுதியாட்டம் தென்பட்டதால் சதுரங்கத் தேற்றத்தின்படி இருவரும் 40-வது நகர்த்தலின்போது சமன் செய்ய ஒப்புக் கொண்டனர்.

35ஆவது நகர்த்தலின்போது ஆனந்த் Qg3 என்கிற நகர்த்தலுக்குப் பதிலாக h5 என்ற நகர்த்தலை விளையாடியிருந்தால் ஆட்டத்தின் இறுதிகட்டம்  35... Nxh5 36. Bxh5Rxh5 37.Rxd6Rxd6 38.Qxd6Qxd6+ 39. Rxd6  என்று தொடர்ந்திருந்தால் ஆனந்துக்குச் சாதகமாக ஆட்டம் மாறியிருக்கும் என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள்.

3 ஆட்டங்களின் முடிவில் ஆனந்த் 2 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று வருகிறார். ஆரோனியன், கர்ஜாகின் ஆகியோரும் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள். இன்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினுடன் மோதவுள்ளார்.

1. e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 Nf6 4. d3 Bc5 5. c3 O-O 6. O-O d6 7. h3 Ne7 8. d4 Bb6 9. Bd3 Ng6 10. Re1 Re8 11. Qc2 exd4 12. cxd4 c5 13. dxc5 Bxc5 14. Nc3 Be6 15. Be3 Qc8 16. Bxc5 Qxc5 17. Qd2 Ne5 18. Be2 Nxf3+ 19. Bxf3 Rad8 20. Red1 h5 21. Qd4 Qg5 22. Qd2 Qe5 23. Qe3 a6 24. Rd4 Bd7 25. Rad1 Bc6 26. g3 Re6 27. Bg2 h4 28. gxh4 Rde8 29. Bf3 a5 30. a4 Qc5 31. Qf4 Re5 32. R1d3 R8e6 33. Kh2 Qb6 34. Rd2 Qd8 35. Qg3 Bxe4 36. Bxe4 Nxe4 37. Nxe4 Rxe4 38. Rxe4 Rxe4 39. Rxd6 Qxh4 40. Qxh4  ½ - ½

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com