கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்த் அபார வெற்றி!

மாஸ்கோவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், 6-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்த் அபார வெற்றி!
Updated on
1 min read

மாஸ்கோவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், 6-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 11 முதல் 30 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதவுள்ள மற்றொரு வீரரை தேர்வு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதில் விஸ்வநாதன் ஆனந்த், வெஸலின் டோபலோவ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, இத்தாலியின் ஃபாபியானோ கருணா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

5-வது சுற்றுகளின் முடிவில், 3.5 புள்ளிகளுடன் கர்ஜாகின் முதலிடத்தில் இருந்தார். 3 புள்ளிகளுடன் ஆரோனியன் 2-ம் இடத்திலும் 2.5 புள்ளிகளுடன் ஆனந்துடன் சேர்த்து மொத்தம் 4 வீரர்கள் 3-ம் இடத்தில் இருந்தார்கள்.

6-வது சுற்றில் பீட்டர் ஸ்விட்லரை எதிர்கொண்டார் ஆனந்த். வெள்ளை நிறக் காய்களுடன் ஆடினார் ஆனந்த்.

Bb7  என்கிற 8-வது நகர்த்தலின் மூலம் ஆனந்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் ஸ்விட்லர். ஆனால், அடுத்தடுத்த நகர்த்தலில் ஆட்டத்தைத் தன்பக்கம் கொண்டுவந்தார் ஆனந்த். 16-வது நகர்த்தலில்  axb5 என்கிற முக்கியமான முடிவை மேற்கொண்டார். இந்த முடிவை எடுக்க ஆனந்துக்குச் சில நிமிடங்கள் பிடித்தாலும் அதுவே ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பதாக இருந்தது. இதன்பிறகு ஸ்விட்லரால் ஆனந்தின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை. 24-வது நகர்த்தலின்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

ஒரு தோல்விக்குப் பிறகு ஆனந்தால் மீண்டுவரமுடியாது என்று பலரும் கணித்த நிலையில் அட்டகாசமான வெற்றியால் போட்டியை பரபரபாக்கியுள்ளார் ஆனந்த். 6-வது சுற்றுகளின் முடிவில் கர்ஜாகினும் ஆரோனியனும் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள். 3.5 புள்ளிகளுடன் ஆனந்த் 2-ம் இடத்தில் உள்ளார். இன்று ஓய்வுநாள். அனிஷ் கிரியை நாளை எதிர்கொள்கிறார் ஆனந்த்.

ஆனந்த் - ஸ்விட்லர் செய்தியாளர் சந்திப்பு  

</p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com