இந்தியா டெஸ்ட் தொடர்: பந்துவீச்சு பயிற்சியாளராக சமீந்தா வாஸ் நியமனம்

இந்தியா டெஸ்ட் தொடர்: பந்துவீச்சு பயிற்சியாளராக சமீந்தா வாஸ் நியமனம்

இந்தியா, இலங்கை மோதும் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சமீந்தா வாஸ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
Published on

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட
தொடரில் விளையாடுகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 26-ந் தேதி காலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சமீந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்காக இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 355 விக்கெட்டுகளும், 322 ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சாதனை பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

முன்னதாக, 2013 மே முதல் 2015 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இலங்கை அணியின் குறுகிய கால பந்துவீச்சு பயிற்சியாளராக அவ்வப்போது செயல்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com