இத்தாலி ஓபன் மகளிர் இறுதியில் ஜோஹன்னா கொண்டா: அரையிறுதியில் நடால், ஜோகோவிச்
By DIN | Published On : 19th May 2019 03:35 AM | Last Updated : 19th May 2019 03:35 AM | அ+அ அ- |

ரோம்: இத்தாலி ஓபன் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஜோஹன்ன கொண்டா தகுதி பெற்றார்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சும், டெல்பொட்ரோவும் மோதினர். இதில் தோல்வியின் விளிம்பில் இருந்த ஜோகோவிச் 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.அதில் ஆர்ஜென்டீனாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன் மோதுகிறார்.
நடப்பு சாம்பியன் நடால் 6-4, 6-0 என்ற நேர் செட்களில் சகவீரர் பெர்ணான்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். கிரீஸ் வீரர் சிட்சிபாஸூடன் அதில் மோதுகிறார் நடால்.
மகளிர் பிரிவில் ஒஸாகா விலகியதால், கிகி பெர்டென்ஸ் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கொண்டா 6-3, 3-6,6-1 என செக். குடியரசின் மார்கெட்டாவை வீழ்த்தினார்.
கரோலினா பிளிஸ்கோவா 6-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தினார். கிரீஸ் மரியா ஸக்காரி 5-7, 6-3, 6-0 என கிறிஸ்டினாவை வென்றார்.