ஆமதாபாதில் இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து
By DIN | Published On : 19th May 2019 03:31 AM | Last Updated : 19th May 2019 03:31 AM | அ+அ அ- |

புது தில்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஏஐஎப்எப் சார்பில் 4 நாடுகள் கலந்து கொள்ளும் இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 7 முதல் 18-ஆம் தேதி வரை ஆமதாபாதில் நடைபெறவுள்ளது.
இந்தியா, சிரியா, வடகொரியா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட நான்கு அணிகள் இரண்டாவது இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டியில் கலந்து கொள்கின்றன.
ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் அனைத்து அணிகளுடன் மோதும். முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும்.
இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது. கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் கென்யாவை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா.