திணறும் தென் ஆப்பிரிக்கா: உணவு இடைவேளைக்கு முன் 4 முக்கிய விக்கெட்டுகள் காலி!

இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஃபாலோ ஆன் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 4-ம் நாள் உணவு இடைவேளையில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
திணறும் தென் ஆப்பிரிக்கா: உணவு இடைவேளைக்கு முன் 4 முக்கிய விக்கெட்டுகள் காலி!


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஃபாலோ ஆன் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 4-ம் நாள் உணவு இடைவேளையில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் புணேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-ம் ஆட்டநேர முடிவில் 275 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்திய அணி இன்று காலை ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது. இதன்படி, தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 2-வது பந்திலேயே இஷாந்த் சர்மாவின் இன்ஸ்விங் பந்தில் மார்கிரம் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய த்யூனிஸ் டி புருயின் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் பந்தில் சாஹாவின் சூப்பர் மேன் கேட்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெசிஸ் தெம்பா பவுமா முன்னதாக களமிறங்கினார். தென் ஆப்பிரிக்காவின் அனுபவ வீரர்களான டீன் எல்கர் மற்றும் டு பிளெசிஸ் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், இந்த பாட்னர்ஷிப்பை அஸ்வின் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க அனுமதிக்கவில்லை. 

53 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் செய்து வந்த டு பிளெசிஸ் அஸ்வின் கேட்ச் சாஹாவிடம் கேட்ச் ஆனார். இதுவும் சாஹாவின் அற்புதமான கேட்ச் ஆகும். டு பிளெசிஸ் ஆட்டமிழந்ததையடுத்து, டீன் எல்கரும் அஸ்வினின் அடுத்த ஓவரில் உமேஷ் யாதவின் சூப்பர் கேட்ச்சில் ஆட்டமிழந்தார். அவர் 72 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். 

இதன்பிறகு, தெம்பா பவுமா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் உணவு இடைவேளை வரை 2 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

4-ம் நாள் ஆட்டநேர உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இந்தியாவைவிட இன்னும் 252 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்திய அணித் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com