7-வது இரட்டைச் சதமும் விராட் கோலியின் புதிய சாதனைகளும்!

இந்த இரட்டைச் சதத்தின் மூலம் கோலி நிகழ்த்திய சாதனைகள்
7-வது இரட்டைச் சதமும் விராட் கோலியின் புதிய சாதனைகளும்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணி கேப்டன் 254 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

இந்த இரட்டைச் சதத்தின் மூலம் கோலி நிகழ்த்திய சாதனைகள்:

ஜூன் 2016 முதல் அதிக டெஸ்ட் இரட்டைச் சதங்கள்

விராட் கோலி - 7
இங்கிலாந்து - 3
நியூஸிலாந்து - 3
பாகிஸ்தான் - 3
ஆஸ்திரேலியா - 2
வங்கதேசம் - 2
மேற்கிந்தியத் தீவுகள் - 1

அதிக இரட்டைச் சதங்கள்

பிராட்மேன் - 12
சங்கக்காரா - 11
லாரா - 9
ஜெயவர்தனே - 7
வேலி ஹேமண்ட் - 7
விராட் கோலி - 7

இரட்டைச் சதங்கள் எடுத்த இந்திய கேப்டன்கள்

1932 - 2015 - 4 (பட்டோடி, கவாஸ்கர், டெண்டுல்கர், தோனி)
2016 முதல் - 7 (அனைத்தும் கோலி எடுத்தவை)

டெஸ்ட் ஆட்டத்தில் கோலி

2011 - 2015: 41 டெஸ்டுகள், 72 இன்னிங்ஸ், இரட்டைச் சதங்கள் எதுவுமில்லை
ஜூன் 2016 முதல்: 40 டெஸ்டுகள், 66 இன்னிங்ஸ், 7 இரட்டைச் சதங்கள்

* ஜூன் 2016 முதல் இன்றுவரை அதிக இரட்டைச் சதங்கள் எடுத்தவர் கோலி. அஸார் அலி, குக், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வீரர்கள் இந்தக் காலக்கட்டத்தில் தலா இரு இரட்டைச் சதங்களை எடுத்துள்ளார்கள். 

* ஆஸ்திரேலியா தவிர தான் டெஸ்ட் ஆட்டங்கள் விளையாடிய வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு எதிராக இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார் கோலி.

* கோலியின் கடைசி 15 சதங்களில் 7 இரட்டைச் சதங்களாக மாறியுள்ளன. இரு சதங்கள் 150 ரன்களைக் கடந்துள்ளன. 

கோலி: 7000 டெஸ்ட் ரன்கள்

முதல் 1000 ரன்கள்: 27 இன்னிங்ஸ்

1000 - 2000 ரன்கள்: 26 இன்னிங்ஸ் 

2000 - 3000 ரன்கள்: 20 இன்னிங்ஸ் 

3000 - 4000 ரன்கள்: 16 இன்னிங்ஸ் 

4000 - 5000 ரன்கள்: 16 இன்னிங்ஸ்

5000 - 6000 ரன்கள்: 14 இன்னிங்ஸ்
6000-7000 ரன்கள்: 19 இன்னிங்ஸ் 

விரைவாக 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள்

சேவாக் - 134 இன்னிங்ஸ்
சச்சின் - 136 இன்னிங்ஸ்
கோலி - 138 இன்னிங்ஸ்
கவாஸ்கர் - 140 இன்னிங்ஸ்
டிராவிட் - 141 இன்னிங்ஸ்

7000 டெஸ்ட் ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள்

சச்சின் - 15,921 ரன்கள்
டிராவிட் - 13288 ரன்கள்
கவாஸ்கர் - 10,122 ரன்கள்
லக்‌ஷ்மண் - 8781 ரன்கள்
சேவாக் - 8586 ரன்கள்
கங்குலி - 7212 ரன்கள்
கோலி - 7054 ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 250+ ரன்களை எடுத்த இந்திய வீரர்கள்

சேவாக் - 319, 309, 293, 254
கருண் நாயர் - 303*
லக்‌ஷ்மண் - 281
டிராவிட் - 270
கோலி - 254*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com