ஆஸி.க்கு எதிராக கடைசி டெஸ்ட்: இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட்
ஆஸி.க்கு எதிராக கடைசி டெஸ்ட்: இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட்

ஆஸி.க்கு எதிராக கடைசி டெஸ்ட்: இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Published on

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

111.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன்கள் இந்தியா பின் தங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் ஆடிய செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்பிறகு விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து இன்று 3-வது நாள் விளையாட்டில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அதன் பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் நிதானமாக ஆடி நம்பிக்கையளித்தனர்.

ஷர்துல் தாக்குர் 115 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 67 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். வாஷிடங்டன் சுந்தர் அரை சதத்தைக் கடந்து விளையாடி வந்த நிலையில் ஸ்டார்க்  பந்தில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.

இறுதியாக களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த நாடராஜன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் ரன்னை பதிவு செய்தார்.

சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி வீரராக களமிறங்கிய நடராஜன் ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்தார்.

முடிவில் இந்திய அணி 111.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்  தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com