டேபிள் டென்னிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் பவினாபென் 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாபென் படேல்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாபென் படேல்.


டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல்  வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா். பாராலிம்பிக் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியா் என்ற பெருமையை பெற்ற்றார்.

இதன் முலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள பவினாபென், அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் மியாவ் ஜாங்கை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட்களில் 34 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இதுவரை மியாவை 11 முறை சந்தித்துள்ள பவினாபென்னுக்கு, இது முதல் வெற்றியாகும்.

பவினாபென் அடுத்தபடியாக, இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலையில் இருக்கும் மற்றொரு சீன வீராங்கனையான யிங் ஸௌவை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொண்டார். மூன்றாவது போட்டியில் 11-6 என்ற கேம் கணக்கில் யிங் ஸௌ வென்றார். அத்துடன் யிங் ஸௌ 11-7,11-5,11-6 என்ற கேம் கணக்கில் போட்டியை வென்றார். யிங் ஸௌவிடம் கடும் சவாலை எதிா்கொண்ட இந்தியாவின் பவினாபென்,  3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். 

இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார் பவினா. 

தேசிய விளையாட்டு தினமான இன்று டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் பவினா. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, டோக்கியோ பாராலிம்பிக் போட்டி என இரண்டிலும் இந்தியாவின் முதல் பதக்கத்தை வீராங்கனைகளே வென்று அசத்தியுள்ளனர் என்பது மேலும் சிறப்பு. 

வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பவினாவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com