சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்தார் ஷிகர் தவான்
By DIN | Published On : 19th July 2021 04:20 PM | Last Updated : 19th July 2021 04:45 PM | அ+அ அ- |

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்தார் ஷிகர் தவான்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் நேற்று இலங்கை உடனான முதல் ஒருநாள் போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி அணியை வெற்றிபெறச் செய்தார்.இப்போட்டியில் அவர் அடித்த 86 ரன்களோடு அவர் விளையாடிய ஒட்டுமொத்த சர்வேதசப் போட்டிகளின் மொத்த ரன்கள் 10000யைத் தாண்டியது.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 10000 ரன்களைக் கடந்திருந்த நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த இந்திய அணி வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி, சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், எம்.எஸ் தோனி , முகமது அசாருதீன் , ரோகித் சர்மா, யுவராஜ் சிங், விரேந்தர் சேவாக் ஆகியவர்களைத் தொடர்ந்து அந்தப் பட்டியலில் 10 வது இடத்தையும் பிடித்திருக்கிறார்.
இலங்கையுடன் மூன்று ஒருநாள் போட்டிகளும் மூன்று T 20 போட்டிகளும் கொண்ட தொடரில் அணியைத் தலைமை ஏற்று நடத்துவது ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.