உலக கவனத்தை ஈர்த்த ஹிஜாப் விவகாரம்: பிரபல கால்பந்து வீரரின் இன்ஸ்டாகிராம் பதிவு

அமைதிக்காக நோபல் பரிசு வென்ற மலாலாவை தொடர்ந்து, பிரபல கால்பந்து வீரர் பால் போக்பா, ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள ஹிஜாப் விவகாரம் உலக கவனத்தை பெற்றுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது குறித்து முடிவெடுக்கும் வரை மதம் சார்ந்த உடைகள் அணிவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, வகுப்பறைகளில் ஹிஜாப் அணியும் விவகாரம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இந்த வாரம் மூடப்பட்டது. 

உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர், ஹிஜாப் அணிய தடைவிதித்த மாநிலத்தின் பிற கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

அமைதிக்காக நோபல் பரிசு வென்ற மலாலா, இஸ்லாமிய பெண்களுக்காக குரல் கொடுத்துள்ள நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பிரபல வீரர் பால் போக்பா ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்தியாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்லும் சிறுமிகளுக்கு இந்துத்துவ கும்பல் தொல்லை கொடுக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போக்பா, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இஸ்லாம் மதத்தை பின்பற்றிவருகிறார். இவரின் தாயாரும் இஸ்லாமியர் ஆவார். லண்டனை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிஇஸ்மைதீன் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் 58 வினாடிகள் ரீல்ஸ் விடியோவை போக்பா பகிர்ந்துள்ளார்.

அதில், காவி துண்டை அணிந்த ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய கும்பல், ஹிஜாப் அணிந்த இளம் பெண்களை சுற்றி சூழ்ந்து கொள்கிறது. அப்போது, குறைந்தபட்சம் 12க்கும் மேற்பட்ட ஆண்கள் மூர்க்கத்தனமாக கோஷம் எழுப்புகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் அங்கிருந்து செல்ல முடியாதபடி மற்ற ஆண்கள் தங்களின் கைகளை பிடித்து கொள்கின்றனர். அந்த பாதுகாப்பு வளையத்திலிருந்து பெண்கள் தப்ப முடியாமல் தவிக்கின்றனர்.

பின்னர், ஆசிரியர் போல் உள்ள ஒரு இளம் பெண், சந்தேகத்தின் இடமான வகையில் வகுப்பறையின் கதவுகளை திறந்துவிடுகிறார். அங்கிருந்து, மேலும் காவி துண்டு அணிந்த சிறுவர்கள் வருகிறார்கள். இந்த விடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com