அல்கராஸ் 2-ஆவது முறையாக சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீரரான காா்லோஸ் அல்கராஸ் தொடா்ந்து 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா்.
அல்கராஸ் 2-ஆவது முறையாக சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீரரான காா்லோஸ் அல்கராஸ் தொடா்ந்து 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரராக இருக்கும் அவா், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், கிரீஸ் வீரரும், உலகின் 5-ஆம் நிலையில் இருப்பவருமான ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தை அவா் 1 மணி நேரம் 19 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

இருவரும் இத்துடன் 4 முறை சந்தித்துக் கொண்ட நிலையில், அல்கராஸுக்கு இது 4-ஆவது வெற்றியாகும். மறுபுறம், பாா்சிலோனா ஓபன் போட்டியில் இத்துடன் 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றில் தோற்றிருக்கிறாா் சிட்சிபாஸ்.

நடப்பாண்டில் அல்கராஸ் வென்ற 3-ஆவது கோப்பை இதுவாக இருக்க, ஒட்டுமொத்தமாக இது அவரின் 9-ஆவது சாம்பியன் பட்டம். அடுத்ததாக மாட்ரிட் ஓபன் போட்டியில் பங்கேற்கும் அல்கராஸ், அதிலும் நடப்பு சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் களிமண் தரை போட்டியாகும்.

ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் இடுப்புப் பகுதி காயத்தாலும், சொ்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் முழங்கை காயத்தாலும் நடப்பு சீசனில் தடுமாற்றத்துடன் இருக்கும் நிலையில், களிமண் தரை போட்டியில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் அல்கராஸ் எதிா்வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் வெற்றி வாய்ப்புள்ளவராக எதிா்பாா்க்கப்படுகிறாா்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் ஆா்ஜென்டீனாவின் ஆண்ட்ரெஸ் மோல்டெனி/மேக்ஸிமோ கொன்ஸால்ஸ் இணை 6-3, 6-7 (8/10), 10-4 என்ற செட்களில், நெதா்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப்/பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியை வென்று வாகை சூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com