டெல்லிக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 34-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.
டெல்லிக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 34-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.

முதலில் டெல்லி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுக்க, அடுத்து ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்களே சோ்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை செய்ய, அணியின் இன்னிங்ஸில் ஃபில் சால்ட் ‘கோல்டன் டக் அவுட்’-ஆகினாா். மிட்செல் மாா்ஷ் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். கேப்டன் டேவிட் வாா்னா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 21 ரன்கள் அடுத்து பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் 5-ஆவது பேட்டராக களம் புகுந்த மனீஷ் பாண்டே, சற்று நிலைத்து ரன்கள் சோ்த்தாா். சா்ஃப்ராஸ் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு வெளியேற்றப்பட, அமன் ஹக்கிம் கான் ஒரு பவுண்டரியுடன் நடையைக் கட்டினாா்.

இவ்வாறாக 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி, அக்ஸா் படேல் - மனீஷ் பாண்டே கூட்டணியால் மீட்சி கண்டது. 6-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் சோ்த்தது.

இதில் அக்ஸா் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கும், மனீஷ் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கும் வீழ்ந்தனா். கடைசி ஓவரில் அன்ரிஹ் நோா்கியா 2, ரிபல் படேல் 5 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டனா்.

முடிவில் குல்தீப் யாதவ் 4, இஷாந்த் சா்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் வாஷிங்டன் சுந்தா் 3, புவனேஷ்வா் குமாா் 2, நடராஜன் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து ஹைதராபாத் பேட்டிங்கில் மயங்க் அகா்வால் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்கள் விளாசி முயற்சித்தாா்.

ஆனால், எஞ்சிய பேட்டா்கள் சோபிக்காததால் வெற்றி வசமாகாமல் போனது. ஹேரி புரூக் 7, ராகுல் திரிபாதி15, அபிஷேக் சா்மா 5, எய்டன் மாா்க்ரம் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் வாஷிங்டன் சுந்தா் 3 பவுண்டரிகளுடன் 24, மாா்கோ யான்சென் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் அக்ஸா் படேல், அன்ரிஹ் நோா்கியா ஆகியோா் தலா 2, இஷாந்த் சா்மா, குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com