சிஎஸ்கே ரசிகர்களை 'ப்ராங்க்’ செய்த ஜடேஜா!

தோனிக்கு முன்னதாக களமிறங்குவது போல் ரசிகர்களை ஏமாற்றிய விடியோ வைரல்.
சிஎஸ்கே ரசிகர்களை 'ப்ராங்க்’ செய்த ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை ரவீந்திர ஜடேஜா நேற்றைய ஆட்டத்தின் போது ஏமாற்றிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவதாக பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 138 என்ற எளிய இலக்கை சேஸ் செய்தது. 17-வது ஓவரில் துபே அவுட்டாக அடுத்து தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், பேட்டை தூக்கிக் கொண்டு ஜடேஜா வீரர்கள் அறையில் இருந்து வெளிவர ரசிகர்களின் சப்தம் குறைய தொடங்கியது. உடனே மீண்டும் அறைக்குள் ஜடேஜா திரும்ப, தோனி களத்திற்குள் வந்தார்.

வழக்கமாக தோனியின் பேட்டிங்கை காண வேண்டும் என்ற ஆர்வத்தில், அவருக்கு முன்னதாக களமிறங்கும் ஜடேஜா விரைவில் அவுட்டாக வேண்டும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள், அவர் அவுட்டானவுடன் ஆரவாரம் செய்வர்.

இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தின் போது ரசிகர்களை ஜடேஜா ஏமாற்றியுள்ளார்.

இந்த காட்சியை சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com