ராஞ்சி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 307 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய வீரர் துருவ் ஜூரெல்
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய வீரர் துருவ் ஜூரெல்படம் : பிடிஐ

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் சோ்த்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன், முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து 2--அம் நாளான நேற்று(பிப்.24) பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் முதல் வரிசை வீரர்கள் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வரிசையாக நடையைக் கட்டினர். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் சேர்த்தார். சுப்மான் கில் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், 3-ஆம் நாள்(இன்று பிப்.25) ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் பின் வரிசையில் களமிறங்கிய இந்திய அணியின் துருவ் ஜூரெல் அபாரமாக ஆடி 90 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த துருவ் ஜூரெல், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். தனது 2-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் துருவ், 10 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

டாம் ஹார்ட்லே பந்துவீச்சில் பவுல்ட் ஆகி வெளியேற முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 307 ரன்கள் சோ்த்தது. குல்தீப் யாதவ் 28 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷோயைப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டாம் ஹார்ட்லே 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சென் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதன்மூலம், இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து - 353 (104.5 ஓவா்கள்)

ஜோ ரூட் 122*

ஓலி ராபின்சன் 58

பென் ஃபோக்ஸ் 47

ஜாக் கிராலி 42

பந்துவீச்சு

ரவீந்திர ஜடேஜா 4/67

ஆகாஷ் தீப் 3/83

முகமது சிராஜ் 2/78

அஸ்வின் 1/83

இந்தியா - 307 (103.2 ஓவா்கள்)

துருவ் ஜூரெல் 90

ஜெய்ஸ்வால் 73

சுப்மான் கில் 38

குல்தீப் யாதவ் 28

பந்துவீச்சு

ஷோயைப் பஷீர் 5/119

டாம் ஹார்ட்லே 3/68

ஜேம்ஸ் ஆண்டர்சென் 2/48

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com