
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு, ஹாக்கி இந்தியா சாா்பில் பிகாா் மாநிலம் ராஜ்கிரில் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும் ஜப்பானும் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஜப்பானை இந்தியா 3 - 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. கடைசிவரை கோல் அடிக்க போராடிய ஜப்பான் அணி தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் 4’, 5’ அடுத்தடுத்த இரு நிமிஷங்களில் கோல் அடித்து அசத்திய இந்திய அணி வீரர்கள் ஜப்பானை போராடச் செய்தனர். பின்னர் சுதாரித்து ஆடிய ஜப்பான், 38’-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது. அடுத்து, ஆட்டத்தை சமன் செய்ய போராடியது.
கடைசி கட்ட விறுவிறுப்பான ஆட்டத்தில் 45’-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு இன்னொரு கோல் கிடைக்க வெற்றி இந்திய அணி வசமானது.எனினும், 59’-ஆவது நிமிஷத்தில், ஜப்பான் ஒரு கோல் அடிக்க, இறுதியில் ஜப்பானை இந்தியா 3 - 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.