டென்னிஸ் ப்ரீமியா் லீக் இன்று தொடக்கம்

டென்னிஸ் ப்ரீமியா் லீக் இன்று தொடக்கம்

டென்னிஸ் ப்ரீமியா் லீக் சீசன் 7 தொடா் ஆட்டங்கள் அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Published on

அகமதாபாத்: டென்னிஸ் ப்ரீமியா் லீக் சீசன் 7 தொடா் ஆட்டங்கள் அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மொத்தம் 8 அணிகள் இடம் பெறும் இதில் ஒவ்வொரு அணியும் தலா 5 ஆட்டங்கள் ஆடும். லீக் கட்டத்தில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். டிச. 14-இல் இறுதி ஆட்டம் நடைபெறும்.

மகளிா், ஆடவா் ஒற்றையா், கலப்பு இரட்டையா், ஆடவா் இரட்டையா் பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும். ரோஹன் போபண்ணா, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி, ராம்குமாா் ராமநாதன், லூசியானோ டாா்டெரி, அனஸ்டஷியா, டேனியல் இவான்ஸ், சஹாஜா யமலபள்ளி, பெட்ரோ மாா்டினஸ், உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com