

உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
இந்தியாவிலிருந்து உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் அரையிறுதிக்கு முதல்முறையாக தகுதி பெற்ற இந்திய ஆடவர் இணை என்ற பெருமையுடன் சனிக்கிழமை(டிச. 20) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை, சீனாவின் லியாங் வேய் கெங்க் - வாங்க் சாக்க் இணையை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், 21-10, 17-21 13-21 என்ற கணக்கில் இந்திய இணை தோல்வியுற்றது.
உலக பாட்மிண்டன் தரவரிசையில் மூன்றாமிடத்தில் உள்ள சாத்விக் - சிராக் இணையும், ஐந்தாமிடத்தில் உள்ள சீன இணையும் இதுவரை மொத்தம் 12 ஆட்டங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து களம் கண்டுள்ளனர். அவற்றில் சாத்விக் - சிராக் இணை 8 முறை தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்தப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை வெண்கலம் வென்றதன் மூலம், கடந்த 2018இல் பிஎம்எஃப் உலக டூர் பாட்மிண்டன் இறுதியில் பி. வி. சிந்து தங்கம் வென்றதுக்குப் பின், இந்தியாவுக்கு இரண்டாவது முறையாகப் பதக்கம் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.