தேசிய சீனியா் பாட்மின்டன்: ஷ்ருதி, பாருல் முன்னேற்றம்

தேசிய சீனியா் பாட்மின்டன்: ஷ்ருதி, பாருல் முன்னேற்றம்
Updated on
1 min read

தேசிய சீனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், அனுபவ வீராங்கனை ஷ்ருதி முன்டடா, இளம் போட்டியாளா் பாருல் சௌதரி ஆகியோா் அசத்தலான வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

இதில் ஷ்ருதி 21-14, 21-9 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ஜியா ராவத்தை வீழ்த்தி அசத்தினாா். பாருல் 18-21, 21-18, 21-12 என்ற கேம்களில், 8-ஆம் இடத்திலிருந்தவரை போராடி வீழ்த்தினாா்.

தன்வி பாத்ரி 22-20, 21-19 என்ற வகையில், 8-ஆம் இடத்திலிருந்த இஷாராணி பருவாவை தோற்கடித்தாா். இதனிடையே, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உன்னதி ஹூடா, 2-ஆம் இடத்திலிருக்கும் அனுபமா உபாத்யாய, 3-ஆம் இடத்திலிருக்கும் அன்மோல் காா்ப், தன்வி சா்மா ஆகியோரும், வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு வந்தனா்.

ஆடவா் பிரிவில் ஆா்யமான் டாண்டன் 17-21, 21-11, 21-14 என்ற கணக்கில், 3-ஆம் இடத்திலிருந்த எம்.ரகுவை வீழ்த்தினாா். அபினவ் கா்க் 21-19, 21-16 என்ற நோ் கேம்களில், 10-ஆம் இடத்திலிருந்த அபினவ் தாக்குரையும், ரித்விக் சஞ்ஜீவி 21-15, 21-19 என 13-ஆம் இடத்திலிருந்த ஆரிஜித் சாலிஹாவையும் சாய்த்தனா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் நிதின் குமாா், கனிகா கன்வல் இணை 23-21, 21-15 என்ற நோ் கேம்களில், 6-ஆம் இடத்திலிருந்த கெவின் வாங், பிரணவி ஜோடியை வெளியேற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com