ஆக. 29-இல் புரோ கபடி லீக் சீசன் 12 போட்டி தொடக்கம்

ஆக. 29-இல் புரோ கபடி லீக் சீசன் 12 போட்டி தொடக்கம்

Published on

மும்பை, ஜூலை 9: புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 தொடா் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது என அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

நடப்புச் சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் மீண்டும் களம் காண்கின்றனா்.

பிகேஎல் ஏலம் கடந்த மே மாதம் நடைபெற்றது. 12 அணிகளும் தங்களது அணிகளை வலுப்படுத்தியுள்ளன. எனவே, வரவிருக்கும் சீசன் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சீசன் 12 ஆட்டங்களுக்கான மைதானங்கள் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

பிகேஎல் லீக் ஆணையா் அனுபம் கோஸ்வாமி கூறுகையில்,

அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் 10 வீரா்கள் ரூ.1 கோடிக்கு மேல் பெறுமான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். ரசிகா்களுக்கு மேலும் ஒரு அதிரடியான கபடி பருவத்தை வழங்க உள்ளோம்.”

இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனம், மாஷல் ஸ்போா்ட்ஸ், ஜியோ ஸ்டாா் ஆகியவை இணைந்து பிகேஎல் தொடரை நடத்துகின்றன.

X
Dinamani
www.dinamani.com