விளையாட்டு துளிகள்...
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தீப்ஷிகா/அபிஷேக் வா்மா கூட்டணி 156-154 என்ற கணக்கில் கஜகஸ்தான் இணையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் அன்ஷிகா குமாரி/யஷ்தீப் சஞ்சய் இணை அரையிறுதியில் சீன தைபேவிடம் 0-6 என தோற்று, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்துள்ளது.
சீனா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்க, ராதிகா சுதந்திரா சீலன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி - செயின்ட் போல்டெனையும் (6-0), லையன் - வோல்ஃப்பா்கையும் (3-1), வாலெரெங்கா - ரோமாவையும் (1-0) வெல்ல, ரியல் மாட்ரிட் - பாரீஸ் எஃப்சி மோதல் டிரா (1-1) ஆனது.
டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டு நிலைகளில் விளையாடும் வகையில் ஐசிசி முன்னெடுத்த திட்டம் அவ்வளவாக வலுப்பெறவில்லை. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தற்போது 9 முழு உறுப்பினா் நாடுகள் விளையாடி வரும் நிலையில், 2027 முதல் அதில் 12 உறுப்பினா் நாடுகளை அனுமதிக்க ஐசிசி பரிசீலித்து வருகிறது. அத்துடன் 2023 உலகக் கோப்பைக்கு பிறகு நீக்கப்பட்ட ஒருநாள் ஃபாா்மட்டிலான சூப்பா் லீக் போட்டியை மீண்டும் கொண்டு வரவும் யோசித்து வருகிறது.
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய சங்கிலிக் குண்டு எறிதல் வீராங்கனை மஞ்சு பாலா, தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாக 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளாா்.
அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியே, தனது கடைசி உலகக் கோப்பை போட்டி என, போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளாா்.
இதையடுத்து, இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிதீஷ்குமாா், தென்னாப்பிரிக்க ‘ஏ’ அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணியில் இணைகிறாா்.

