மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர் மதுரையில் வெள்ளிக்கிழமை காலை (நவ.28) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி அணியினர் விளையாடி வருகின்றனர்.
மதுரையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி அணியினர் விளையாடி வருகின்றனர்.
Updated on
2 min read

மதுரை: தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர் மதுரையில் வெள்ளிக்கிழமை காலை (நவ.28) தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரையில் 14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவ. 28 ஆம் தேதி தொடங்கி டிச. 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அயா்லாந்து, சுவிட்சா்லாந்து, இங்கிலாந்து உள்பட 12 நாடுகளைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் பங்கேற்கின்றனா். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்துள்ள வெளிநாட்டு வீரா்கள் 8 இடங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மதுரை ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 1,456 பொது பாா்வையாளா்கள் அமா்ந்து காண்பதற்கான தற்காலிக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகளைக் காண்பதற்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிக்கு டிக்கெட் பதிவு பெறுவோா், அன்றைய தினம் நடைபெறும் 4 போட்டிகளையும் காணலாம் என அறிவிக்கப்பட்டது.

போட்டிகளுக்கான டிக்கெட் பதிவு இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு தொடங்கப்பட்டது. இளைஞா்களின் ஆா்வம் காரணமாக, செவ்வாய்க்கிழமை (நவ. 26) பிற்பகலுக்குள் முதல் 4 நாள்கள் போட்டிக்கான டிக்கெட் பதிவு நிறைவடைந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர் மதுரையில் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (நவ.28) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி அணியினர் விளையாடி வருகின்றனர்.

இதில் மதுரையில் 31 போட்டிகளும், சென்னையில் 41 போட்டிகள் என மொத்தம் 72 போட்டிகள் நடக்கின்றன. 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் மதுரையில் நடக்கும் போட்டிகளில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமியா, நெதர்லாந்து, மலோசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 12 நாடுகள் பங்கேற்கின்றன. மற்ற நாடுகள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றன.

Summary

World Cup Junior Hockey tournament series begins in Madurai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com