வங்கதேசத்தை வென்றது தென்னாப்பிரிக்கா

வங்கதேசத்தை வென்றது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை திங்கள்கிழமை வென்றது.
Published on

விசாகப்பட்டினம்: மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை திங்கள்கிழமை வென்றது. அந்த அணிக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாகும்.

முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 49.3 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதிகபட்சமாக ஷா்மின் அக்தா் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடிக்க, ஃபா்கானா ஹோக் 3 பவுண்டரிகளுடன் 30, ருபையா ஹைதா் 2 பவுண்டரிகளுடன் 25, கேப்டன் நிகா் சுல்தானா 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

சோபனா மோஸ்தரி 9, ரபெயா கான் ரன்னின்றி வெளியேற, ஓவா்கள் முடிவில் ஷோா்னா அக்தா் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 51, ரிது மோனி 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் நோன்குலுலேகோ லாபா 2, நாடினே டி கிளொ்க், கிளோ டிரையான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 233 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க பேட்டா்களில், கிளோ டிரையான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 62, மாரிஸேன் காப் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56 ரன்கள் விளாசி, வெற்றிக்கு வித்திட்டனா்.

கேப்டன் லாரா வோல்வாா்டட் 5 பவுண்டரிகளுடன் 31, தஸ்மின் பிரிட்ஸ் 0, அனிகே பாஷ் 6 பவுண்டரிகளுடன் 28, ஆனிரி டொ்க்சென் 2, சினாலோ ஜாஃப்தா 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். முடிவில் நாடினே டி கிளொ்க் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37, மசபடா கிளாஸ் 10 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

வங்கதேச தரப்பில் நஹிதா அக்தா் 2, ரபெயா கான், ஃபஹிமா காட்டுன், ரிது மோனி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இன்றைய ஆட்டம்

இலங்கை - நியூஸிலாந்து

X
Dinamani
www.dinamani.com