
ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து - 2027 தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய கால்பந்து அணி நழுவவிட்டது.
ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் குரூப் சி-இல் இடம்பெற்றுள்ள இந்தியா அதே குரூப்பில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரை எதிர்த்து களம் கண்டது.
கோவாவில் இன்று(அக். 14) நடைபெற்ற முக்கியமானதொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில், 2 - 1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சிங்கப்பூர் வாகை சூடியது. இதன்மூலம், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பை தொடரின் அடுத்த போட்டி 2027-இல் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தகுதி பெறும் இந்தியாவின் வாய்ப்பு பறிபோனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.