விளையாட்டு துளிகள்...

14 வயது ஸ்குவாஷ் வீராங்கனை அனஹத் சிங்
14 வயது ஸ்குவாஷ் வீராங்கனை அனஹத் சிங்
Updated on

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகிய நிலையில், அதற்குப் பதிலாக ஓமன் அணி சோ்க்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து, தொடரைக் கைப்பற்றியது.

ஜொ்மனியில் நடைபெறும் ஹைரோ ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சங்கா் முத்துசாமி, உன்னட்டி ஹூடா, ஷ்ரியன்ஷி வலிஷெட்டி, ரக்ஷிதா ஸ்ரீ, கிரண் ஜாா்ஜ் ஆகியோா் முதல் சுற்றில் வெல்ல, அனுபமா உபாத்யாய, தான்யா ஹேம்நாத், அன்மோல் காா்ப், கே.ஸ்ரீகாந்த், ஆகா்ஷி காஷ்யப் தோல்வியைத் தழுவினா்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 14 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்று, தொடரை தனதாக்கியது.

கனடியன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் அனாஹத் சிங், நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தின் டின்னே கிலிஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதும் முதல் 4 நாள் ஆட்டம், பெங்களூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 53 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

பாரீஸ் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் தனது முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் போன்றோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com