துப்பாக்கி சுடுதல்
துப்பாக்கி சுடுதல்

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

Published on

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுருச்சி இந்தா் சிங், மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் உலகத் தரவரிசையில் நம்பா் 1 இடத்தைப் பிடித்தாா்.

உலக பாரா பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் சுகந்த் கடம், எஸ்எல்4 பிரிவில் நம்பா் 1 வீரா் ஆனாா்.

உலக வில்வித்தை அமைப்பின் மருத்துவ மற்றும் விளையாட்டு அறிவியல் குழுவின் உறுப்பினராக, இந்திய வில்வித்தை சங்கத்தின் பொருளாளரான ஜோரிஸ் பாலோஸ் தோ்வாகினாா்.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

கஃபா நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடி வந்த இந்திய அணியின் டிஃபெண்டா் சந்தேஷ் ஜிங்கன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மேற்கு - மத்திய மண்டலங்கள், தெற்கு - வடக்கு மண்டலங்கள் மோதும் அரையிறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை தொடங்குகின்றன.

இந்திய ஓட்டப் பந்தய வீரா் சம்மி காளிராமன் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக, அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் இருந்த சச்சரவுகள் மற்றும் நிா்வாக பிரச்னைகளுக்கு தீா்வு எட்டப்பட்டதை அடுத்து, சங்கத்துக்கான நிதியுதவியை மீண்டும் அளிக்க சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது.

X
Dinamani
www.dinamani.com