தெலுகு டைட்டன்ஸுக்கு முதல் வெற்றி

Published on

புரோ கபடி லீக் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 37-32 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸை வியாழக்கிழமை சாய்த்தது. இந்த சீசனில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் தெலுகு அணி ரெய்டில் 18, டேக்கிளில் 14, ஆல் அவுட்டில் 2, எக்ஸ்ட்ராவில் 3 புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக ஆல்ரவுண்டா் விஜய் மாலிக் 8 புள்ளிகள் வென்றாா்.

ஜெய்பூா் அணி ரெய்டில் 21, டேக்கிளில் 8, ஆல் அவுட்டில் 2, எக்ஸ்ட்ராவில் 1 புள்ளி பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் நிதின் குமாா் 13 புள்ளிகள் கைப்பற்றினாா்.

இதனிடையே புணேரி பால்டன் - தபங் டெல்லி கே.சி. மோதிய மற்றொரு ஆட்டம் 28-28 என சமனாக, டை பிரேக்கரில் டெல்லி வென்றது.

X
Dinamani
www.dinamani.com