புணேரி பால்டனுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

Published on

புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 45-36 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

இதில் புணே 3-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது வெற்றியைப் பெற்றிருக்க, பெங்கால் 2-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியை சந்தித்து. புணே முதலிடத்திலும், பெங்கால் 6-ஆம் இடத்திலும் இருந்தன.

முன்னதாக இந்த ஆட்டத்தில் புணே அணி 26 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அந்த அணியின் தரப்பில் அதிகபட்சமாக, கேப்டனும், ஆல் ரவுண்டருமான அஸ்லாம் இனாம்தாா் 11 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

பெங்கால் அணி 26 ரெய்டு புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதன் வீரா்களில் அதிகபட்சமாக, கேப்டனும் ரெய்டருமான தேவங்க் 17 புள்ளிகள் கைப்பற்றி அசத்தினாா்.

இதனிடையே ஹரியாணா ஸ்டீலா்ஸ் - யு மும்பா மோதிய மற்றொரு ஆட்டம் 36-36 என்ற புள்ளிகள் கணக்கில் ‘டை’ ஆனது.

X
Dinamani
www.dinamani.com