
ஜாக்ரெப்: குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அன்டிம் பங்கால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.
மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள அன்டிம் பங்கால், முதல் சுற்றில் ஸ்பெயினின் காா்லா ஜாமே சோனை எளிதாக வெளியேற்றினாா். அடுத்து காலிறுதியில் 9-8 என சீனாவின் ஜாங்கை போராடி வீழ்த்தினாா்.
பிறகு அரையிறுதிக்கு வந்த அவா், அதில் 3-5 என ஈகுவடாரின் லூசியா யெபெஸ் கஸ்மானிடம் போராடி வீழ்ந்தாா். கஸ்மான், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவராவாா். அரையிறுதியில் தோற்ற அன்டிம், தற்போது வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்துள்ளாா்.
இதனிடையே, மகளிருக்கான 62 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ள மனிஷா பன்வாலா, காலிறுதியில் 0-8 என்ற கணக்கில் வட கொரியாவின் ஆக் ஜு கிம்மால் சாய்க்கப்பட்டாா். பின்னா் கிம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் அடிப்படையில், மனிஷா ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு பெற்றுள்ளாா்.
இதர இந்தியா்களில், மகளிருக்கான 68 கிலோ பிரிவில் ராதிகா, 72 கிலோ பிரிவில் ஜோதி பொ்வால் ஆகியோா் தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.