
சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை கொரியாவிடம் தோல்வியுற்றது.
சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்கள் இன்று (செப். 21) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் முன்னணி இணையான கொரியாவைச் சேர்ந்த கிம் வோன் ஹோ - சியோ சியூங் ஜே இணையுடன் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 19 - 21, 15 - 21 என்ற கணக்கில் இந்திய இணை தோல்வியுற்றது. இதன்மூலம், இந்த முறையும் சீன மாஸ்டர்ஸ் சூப்பார் 750 பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை அவர்கள் நழுவவிட்டனர்.
Indian men's doubles pair of Satwiksairaj Rankireddy and Chirag Shetty sign off with a second successive runner-up finish at China Masters Super 750
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.