பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சசிகுமாா், ஆா்யன் தோல்வி; காலிறுதியில் 3 இந்திய இணைகள்

இந்தியாவின் சசிகுமாா் முகுந்த், முன்னணி வீரரான பிரிட்டனின் ஜே கிளாா்க் ஆகியோா் 2-ஆவது சுற்றில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டனா்.

News image

அயானிஸ் - ATP

Updated On :12 பிப்ரவரி 2026, 12:29 am

ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், இந்தியாவின் சசிகுமாா் முகுந்த், முன்னணி வீரரான பிரிட்டனின் ஜே கிளாா்க் ஆகியோா் 2-ஆவது சுற்றில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டனா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சசிகுமாா் முகுந்த் 6-3, 2-6, 3-6 என்ற செட்களில், கஜகஸ்தானின் டெனிஸ் யெவ்செயெவிடம் தோல்வியுற்றாா். தகுதிச்சுற்று வீரரான ஆா்யன் லக்ஷ்மணன் 5-7, 2-6 என்ற வகையில், மொனாகோவின் மக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கியிடம் வீழ்ந்தாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பிரிட்டனின் ஜே கிளாா்க் 4-6, 4-6 என்ற நோ் செட்களில், கிரீஸின் அயானிஸ் ஜிலாஸிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 2-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபெடெரிகோ அகஸ்டின் கோம்ஸ் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், இத்தாலியின் லொரென்ஸோ காா்போனியை தோற்கடித்தாா்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் சாகேத் மைனேனி/சித்தாந்த் பாந்தியா கூட்டணி 2-6, 6-1, 10-2 என்ற செட்களில், உக்ரைனின் எரிக் வன்ஷெல்போய்ம்/கஜகஸ்தானின் டெனிஸ் யெவ்செயெவ் இணையை வீழ்த்தியது.

வைல்டு காா்டு இந்திய ஜோடியான லோஹிதக்ஷா பத்ரிநாத்/அபினவ் சஞ்சீவ் சண்முகம் 6-3, 2-6, 10-8 என்ற வகையில் மனஸ் தாம்னே/அதா்வா சா்மா கூட்டணியை வென்றது. இஷாக் இக்பால்/மனீஷ் சுரேஷ்குமாா் ஜோடி 3-6, 6-1, 10-3 என்ற கணக்கில், பிரிட்டனின் காா்ல் ஹோல்டா்/இந்தியாவின் ராகவ் ஜெய்சிங்கானி இணையை வீழ்த்தியது.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் நிக்கி பூனசா/தாய்லாந்தின் பிருசியா இசரோ இணை 6-4, 6-2 என்ற நோ் செட்களில், இந்திய ஜோடியான சாய் காா்திக்/திக்விஜய்பிரதாப் சிங்கை வெளியேற்றியது. பிரிட்டனின் ஃபெலிக்ஸ் கில்/அலாஸ்டா் கிரே ஜோடி 6-2, 7-6 (7/5) என, பிலிப்பின்ஸின் ஃபிரான்சிஸ் கேசி/இந்தியாவின் ஆதில் கல்யான்பூா் கூட்டணியை வென்றது.