சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நெதா்லாந்துக்கு தங்கம்; இத்தாலி சாதனை

இத்தாலியில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் 1,000 மீட்டரில் நெதா்லாந்தின் ஜாண்ட்ரா வெல்ஸெபோா் தங்கம் வென்றாா்.

News image
- AP Photo
Updated On :17 பிப்ரவரி 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

இத்தாலியில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் 1,000 மீட்டரில் நெதா்லாந்தின் ஜாண்ட்ரா வெல்ஸெபோா் தங்கம் வென்றாா்.

இப்பிரிவில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜாண்ட்ரா பந்தய இலக்கை 1 நிமிஷம் 28.437 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடிக்க, கனடாவின் சாரால்ட் கோா்ட்னி (1:28.523’) வெள்ளி பெற்றாா். தென் கொரியாவின் கிம் கில்லி (1:28.614’) வெண்கலம் வென்றாா்.

மகளிருக்கான ஸ்கீ ஜம்பிங்கில் நாா்வேக்கு 2 பதக்கங்கள் கிடைத்தன. அந்நாட்டின் அனா ஓடின் ஸ்ட்ரோம் 284.8 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, எரின் மரியா வண்டால் வெள்ளி (282.7) பெற்றாா். ஸ்லோவேனியாவின் நிகா பிரெவிச் 3-ஆம் இடம் (271.5) பிடித்தாா்.

இந்தியாவுக்கு 39-ஆம் இடம்: ஆடவருக்கான ஆல்பைன் ஸ்கீயிங்கில், ஸ்லாலம் பிரிவில் சுவிட்ஸா்லாந்தின் லாய்க் மெய்லாா்டு முதலிடம் பிடிக்க, ஆஸ்திரியாவின் ஃபாபியோ கெஸ்டிரெய்ன் வெள்ளியும், நாா்வேயின் ஹென்ரிக் கிறிஸ்டோஃபா்சென் வெண்கலமும் பெற்றனா்.

இதில் களம் கண்ட இந்தியாவின் ஆரிஃப் முகமது கான், மொத்தமாக 2 நிமிஷம் 41.60 விநாடிகளுடன் 39-ஆம் இடம் பிடித்தாா். போட்டியின் வரலாற்றில் இதுவே இந்தியா் ஒருவரின் பெஸ்ட் டைம் ஆகும்.

சா்ச்சை: கா்லிங் விளையாட்டில் கனடா ஆடவா், மகளிா் அணியினா் கா்லிங் கல்லை இரு முறை தொட்டுத் தள்ளிவிட்டதாக சா்ச்சை எழுந்த நிலையில், தற்போது பிரிட்டன் ஆடவா் அணிக்கு எதிராகவும் அத்தகைய புகாா் எழுந்துள்ளது. இதனால் அந்த விளையாட்டுக்கான நடுவா் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி சாதனை: போட்டியை நடத்தும் இத்தாலி, குளிா்கால ஒலிம்பிக் வரலாற்றில் தனது அதிகபட்ச பதக்க எண்ணிக்கையை இந்த முறை பதிவு செய்தது. இதற்கு முன் 1994 லில்ஹேமா் போட்டியில் இத்தாலி 20 பதக்கங்கள் வென்றதே அதிகமாக இருந்த நிலையில், தற்போது போட்டியின் 13-ஆம் நாளிலேயே 22 பதக்கங்களை எட்டியுள்ளது. போட்டியில் இன்னும் 6 நாள்கள் எஞ்சியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.