இந்திய அமெச்சூா் கபடி கூட்டமைப்பு சாா்பில் 72-ஆவது சீனியா் தேசிய ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, வதோதராவில் உள்ள சமா இண்டோா் காம்ப்ளக்ஸில், பிப். 24 முதல் 27 வரை நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் சா்வீசஸ் உள்பட 31 அணிகள் பங்கேற்கின்றன.
புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-இல் சிறப்பாகச் செயல்பட்ட வீரா்களும் இதில் ஆடுகின்றனா்.
குறிப்பாக அயன் லோச்சாப் (ஹரியாணா), தேவன்க் தலால், பாரத் ஹூடா (சா்வீசஸ்). கடந்த சீசனில் தபாங் டெல்லி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அஷு மாலிக், ரயில்வே அணிக்காக விளையாடுவாா், அதே நேரத்தில் அா்ஜுன் தேஷ்வால் மீண்டும் ஒருமுறை உத்தர பிரதேச அணியில் ஆடுகிறாா்.
தீபக் சங்கா் (தமிழகம்), ஆதித்யா ஷிண்டே (மகாராஷ்டிரம்), நிதேஷ் குமாா் (ஹரியாணா), அனில் (ஹிமாசல பிரதேசம்), உதய பாா்தே (மபி)
நவீன் குமாா், பாரத் ஹூடா, அங்கித் ஜக்லான், ஜெய்தீப் தஹியா உள்ளிட்ட நட்சத்திர வீரா்களைக் கொண்ட நடப்பு சாம்பியனான சா்வீசஸ் அணி பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்கும்.
வலுவான வீரா்களைக் கொண்ட ரயில்வே, ஹரியாணா, மகாராஷ்டிரம் அணிகளும் கடும் சவாலை அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, சீனியா் தேசிய போட்டி குஜராத் கபடி சங்கம், வதோதரா கபடி சங்கம் ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.
தொடர்புடையது

சப்-ஜூனியா் ஆடவா் தேசிய ஹாக்கி: கோவா, உத்தரகாண்ட், அருணாச்சல் வெற்றி
தேசிய சீனியா் கபடி: ரயில்வேஸ் சாம்பியன்

தேசிய சீனியா் ஆடவா் கபடி: தமிழகம், தில்லி தொடா் வெற்றி!

தேசிய சீனியா் ஆடவா் கபடி: தமிழகம், ரயில்வே வெற்றி
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


