பைக்கில் வந்து அசத்திய அதிபர் - கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
புகைப்படம்: ஏஎன்ஐ
புகைப்படம்: ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

18-ஆவது ஆசியப் போட்டிகள் ஜகார்த்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ பார்வையாளர்களை அசத்தும் வகையில் மேடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து, தடகள வீரர்கள் மைதானத்துக்கு வருகை தந்தனர். 

45 நாடுகளில் முதல் நாடாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்துக்கு வருகை தந்தனர். அவர்களைத்தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் வங்கதேச வீரர்கள் வருகை தந்தனர். ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக 569 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்கினார். தேசிய கொடியை ஏந்திச் சென்று நீரஜ் சோப்ரா இந்திய அணியை வழிநடத்தினார். போட்டியை நடத்தும் இந்தோனேஷியா கடைசி நாடாக மைதானத்துக்கு வந்தனர். 

இதைத்தொடர்ந்து, இந்தோனேஷியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அந்நாட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. மைதானத்தின் மேடைக்கு தேசியக் கொடி கொண்டு வரப்பட்டது. 

இந்த மேடை 120 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 26 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த தொடக்க விழாவில் அன்கூன் ,ரைசா, துலூஸ், எடோ கோண்டோலோகித் உள்ளிட்ட பிரபல இந்தோனேஷியாவின் பாடகர்கள் பங்கேற்றனர்.  

நாளை போட்டிகள்: துவக்க நாளான 19-ஆம் தேதி இந்திய மகளிர் ஹாக்கி அணி இரவு 7 மணிக்கு இந்தோனேஷிய அணியுடன் மோதுகிறது.

காலை 8 மணிக்கு துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தேர்வுச் சுற்றில் ரவிக்குமார், அபூர்விசந்தேலா, 10 மணிக்கு ஏர் பிஸ்டல் பிரிவில் அபிஷேக் வர்மா, மனு பேக்கரும், 12 மணிக்கு 10 மீ ஏர் ரைபிள், மாலை 3.20 மணிக்கு 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றும் நடக்கிறது.

மல்யுத்தத்தில் ஆடவர் ப்ரீஸ்டைல் தகுதிச் சுற்றில் சந்தீப் டோமர் (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), சுஷில்குமார் (74கிலோ), பவன்குமார் (86 கிலோ), மெளஸம் கத்ரி (97 கிலோ) மோதுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com