ஸ்குவாஷ்: இறுதிசுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி; ஆடவர் அணிக்கு வெண்கலம்!

ஜகார்த்தா ஆசியப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது...
ஸ்குவாஷ்: இறுதிசுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி; ஆடவர் அணிக்கு வெண்கலம்!
Updated on
1 min read

ஜகார்த்தா ஆசியப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் ஸ்குவாஷ் ஆட்டத்தின் அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொண்டது இந்திய அணி. வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா குருவில்லா, தன்வி கன்னா கியோர் அடங்கிய அணி அபாரமாக ஆடி 2-0 என மலேசியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

ஆடவர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. அரையிறுதியில் ஹாங்காங்கிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. ஒற்றையர் பிரிவில் ஜோஸ்னா, தீபிகா, செளரவ் கோஷல் ஆகிய மூவரும் தலா ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com