
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ் மற்றும் தருண் அய்யாசாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது.
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 4*400 மீட்டர் ஆடவர் தொடர் ஓட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ் மற்றும் தருண் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதையடுத்து, அவர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
முன்னதாக, 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ் வெள்ளி வென்றிருந்தார். 400 மீட்டர் தடை தாண்டுதலில் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்த பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்கும் தமிழக அரசு அவர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.