ஆசியப் போட்டியில் பதக்கம் பெறாத வீரர்களை ஒலிம்பிக் பதக்கச் சிறப்புப் பயிற்சித் திட்டத்திலிருந்து நீக்க முடிவு?

டாப்ஸ் திட்டத்தில் உள்ள வீரர்கள், இடம்பெறாத வீரர்கள் ஆசியப் போட்டியில் எவ்வாறு பங்களித்தார்கள்...
ஆசியப் போட்டியில் பதக்கம் பெறாத வீரர்களை ஒலிம்பிக் பதக்கச் சிறப்புப் பயிற்சித் திட்டத்திலிருந்து நீக்க முடிவு?

2020, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் டாப்ஸ் எனப்படும் சிறப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முழு பயிற்சி தரப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி தரப்படுகிறது. மிஷன் ஒலிம்பிக் செல் என்ற குழு இதற்கான வீரர்களை தேர்வு செய்தது. இந்த பட்டியல் அவ்வப்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தில் உள்ள வீரர்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று சாய் விளையாட்டு அமைப்பின் இயக்குநர் நீலம் கபூர் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் டாப்ஸ் திட்டத்தில் உள்ள வீரர்கள் பலர் பதக்கம் எதுவும் பெறாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளார். மேலும் திட்டத்தில் இல்லாதவர்களும் பதக்கம் வென்றுள்ளார்கள். இதையடுத்து பட்டியலில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதுவரை இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் டாப்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஆசியப் போட்டியில் வெள்ளி வென்றதையடுத்து அவர்கள் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

டாப்ஸ் திட்டத்தில் உள்ள வீரர்கள், இடம்பெறாத வீரர்கள் ஆசியப் போட்டியில் எவ்வாறு பங்களித்தார்கள் என்று பார்க்கலாம்.

 விளையாட்டுகள் பதக்கம்   வென்ற   டாப்ஸ்   திட்ட   வீரர்கள் பதக்கம் வென்ற   டாப்ஸ்   திட்டத்தில்   இல்லாத   அணி   மற்றும்   தனிப்பட்ட   வீரர்கள்  டாப்ஸ்   திட்டத்தில்   இருந்தும்   பதக்கம்   பெறாத   வீரர்கள்   டாப்ஸ்   திட்டத்தில்   இல்லாமல்   பதக்கம்   வென்ற     தனிப்பட்ட   வீரர்கள் 
 வில்வித்தை  3 3  6 0
 தடகளம் 15 6 8 3
 பாட்மிண்டன் 2 0 8 
 குத்துச்சண்டை 2 0 6 
 சைக்கிளிங் 0 0 3 
 குதிரையேற்றப்   பந்தயம் 0 4 0 1
 ஜிம்னாஸ்டிக்ஸ் 0 0 5 
 ஆடவர் ஹாக்கி 18 0 0 
 மகளிர் ஹாக்கி 0 18 0 
 ஜூடோ 0 0 3 
 துடுப்புப்   படகுப்பந்தயம் 0 7 0 1
 பாய்மரப் படகுப்   பந்தயம் 0 5 0 1
 துப்பாக்கிச்   சுடுதல் 8 2 12 2
 ஸ்குவாஷ் 3 5 0 0
 நீச்சல் 0 0 2 
 டேபிள்   டென்னிஸ் 4 2 2 0
 டென்னிஸ் 3 0 4 
 பளு தூக்குதல் 0 0 1 
 மல்யுத்தம் 2 1 8 
 வுஷு 3 1 2 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com