கடைசி கட்டத்தில் அசத்திய முஸ்தபிஸுர்: திணறிய இந்தியா 314 ரன்கள் குவிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது. 
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித், ராகுலின் அற்புதமான தொடக்கத்தால் இந்திய அணி நல்ல ரன் ரேட்டில் ரன் குவித்து வந்தது. ரோஹித் சதம் அடித்தும், ராகுல் அரைசதம் அடித்தும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய கோலி 26 ரன்களுக்கும், பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி சற்று நெருக்கடிக்குள்ளானது. எனினும், ரிஷப் பந்த் தோனியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி நம்பிக்கையளித்தார் . 

முதல் 40 ஓவர்கள் பேட்டிங்: http://bit.ly/2xqDFTs

துரிதமாக ரன் குவித்து வந்ததால், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 45-வது ஓவரில் ஷாகிப் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 ரன்களுக்கு முஸ்தபிஸுர் பந்தில் ஆட்டமிழந்தார். 

எனினும், தோனி கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்து சற்று துரிதமாக ரன் சேர்த்தார். முஸ்தபிஸுரின் சிறப்பான பந்துவீச்சில் அவரும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 

இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை 314 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவரில் இந்திய அணி 63 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிஸுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகிப், சர்கார் மற்றும் ரூபெல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

கடைசி 10 ஓவரில், முஸ்தபிஸுர் 4 ஓவர் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகிப் 3 ஓவர் வீசி 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com