ரோஹித் சர்மாவிடமிருந்து இன்னும் இரு சதங்கள்: விராட் கோலி எதிர்பார்ப்பு

ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பையில் இன்னும் இரு சதங்கள் அடிப்பார் என நம்புகிறேன்...
ரோஹித் சர்மாவிடமிருந்து இன்னும் இரு சதங்கள்: விராட் கோலி எதிர்பார்ப்பு

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 12-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளாக ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட அணிகள் கருதப்பட்டன. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வெளியேறின. இலங்கையை கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே நேரம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியதாவது:

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைப் போட்டியில் நானும் வில்லியம்சனும் விளையாடியுள்ளோம். இப்போது அவரவர் நாடுகளுக்கான அணி கேப்டனாக உலகக் கோப்பை அரையிறுதியில் மீண்டும் சந்திக்கிறோம். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் அந்த நாளை நினைவில் கொள்வார் என நினைக்கிறேன். நாளை அவரைச் சந்திக்கும்போது அப்போது விளையாடிய நாளை நான் நினைவுபடுத்துவேன். யு-19 அணியிலிருந்து முன்னேறி இந்திய அணியின் கேப்டனாக ஆனது நன்றாக உள்ளது. அப்போது இருவரும் விளையாடியபோது மீண்டும் இப்படியொரு தருணத்தில் சந்திப்போம் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

இந்த உலகக் கோப்பையில் என்னுடைய பணி வித்தியாசமாக உள்ளது. ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். களத்தில் ஆட வரும்போது உங்களுக்காக கடமைகள் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். தனிப்பட்ட சாதனைகளில் யாரும் கவனம் செலுத்தவில்லை. ரோஹித்தும் இதேயே சொல்லியிருக்கிறார். அணி விளையாட்டுகளில் நீங்கள் சூழலுக்கு ஏற்பட விளையாடவேண்டும். அதைச் செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். 

ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பையில் இன்னும் இரு சதங்கள் அடிப்பார் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இத்தருணத்தில் அவர் உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக உள்ளார். 

டாஸ் பற்றி கவலைப்படவில்லை. அது எப்படி அமைந்தாலும் விளையாடித்தானே ஆகவேண்டும். டாஸில் தோற்றால் நம்பிக்கையிழக்கக்கூடாது. டாஸில் தோற்று 2-வதாக பேட்டிங் செய்த அணிகள் தோல்வியடைந்ததற்குக் காரணம், ஆடுகளம் அல்ல. அவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தம் தான் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com