சுடச்சுட

  

  உலகக் கோப்பைப் போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்திய மிட்செல் ஸ்டார்க்!

  By எழில்  |   Published on : 12th July 2019 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  starc12

   

  ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

  நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது. 9 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்த ஸ்டார்க் 1 விக்கெட் எடுத்தார். ஏமாற்றமான நாளாக அமைந்தாலும் புதிய சாதனை படைக்க அந்த ஒரு விக்கெட் போதுமானதாக இருந்துள்ளது. 

  மேற்கிந்தியத் தீவுகளில் 2007ல் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 26 விக்கெட்டுகள் எடுத்தார் ஆஸி. அணியிக் கிளென் மெக்ராத். இந்நிலையில் அவரை விடவும் அதிகபட்சமாக ஒரு விக்கெட் எடுத்து 27 விக்கெட்டுகளுடன் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இருமுறை 5 விக்கெட்டுகளும் இருமுறை 4 விக்கெட்டுகளும் அவர் எடுத்துள்ளார். 

  அதேபோல உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 18 ஆட்டங்களில் 49 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார் ஸ்டார்க். 39 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் மெக்ராத். இதையடுத்து அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் மெக்ராத்தின் சாதனையை ஸ்டார்க் முறியடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai