உலகக் கோப்பையை மீண்டும் வெல்லுமா உள்ளூர் அணி?: ஹாட்ரிக் சாதனைக்கு வாய்ப்பு!

நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றுவிட்டால், உலகக் கோப்பையைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக...
உலகக் கோப்பையை மீண்டும் வெல்லுமா உள்ளூர் அணி?: ஹாட்ரிக் சாதனைக்கு வாய்ப்பு!

1975 முதல் 2007 வரை உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுகளை நடத்திய எந்தவொரு நாடும் உலகக் கோப்பையை வென்றதில்லை. 1996-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியது இலங்கை. பாகிஸ்தானில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அந்த அணி கோப்பையை வென்றது. 

இங்கிலாந்து 1975, 1979, 1983, 1999, 2019 ஆகிய வருடங்களில் உலகக் கோப்பையை நடத்தியுள்ளது. 1975, 1979-ல் தனியாக போட்டியை நடத்தியது. 1983, 1999, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளை அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தியது. எனினும் அந்த அணி இதுவரை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில்லை. 

இந்தியா மட்டுமே 2011-ல் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியதோடு இந்தியாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் வென்று கோப்பையைத் தட்டிசென்றது. பிறகு 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியை உள்ளூர் அணியான ஆஸ்திரேலியா வென்றது. 

இந்நிலையில் 2019 உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் இங்கிலாந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன. 

நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றுவிட்டால், உலகக் கோப்பையைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக உள்ளூர் அணி வென்ற பெருமை ஏற்படும். இதனால் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடுகள் கோப்பையை வென்றே ஆகவேண்டிய ஓர் அழுத்தமும் இனி ஏற்படும். 

2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com