உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக கிறிஸ் கெயில் நிகழ்த்திய இரு சாதனைகள்!

உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில்...
உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக கிறிஸ் கெயில் நிகழ்த்திய இரு சாதனைகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய பாக். அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 13.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை கடந்து 108 ரன்களுடன் வென்றது. அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 50 ரன்கள், ஓஷேன் தாமஸ் 4 விக்கெட்டுகளுடன் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்த ஆட்டத்தில் இரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் கிறிஸ் கெயில். 

உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 37 சிக்ஸர்களுடன் கெயிலும் டிவில்லியர்ஸும் முதலிடத்தில் இருந்தார்கள். நேற்றைய ஆட்டத்தில் மூன்று சிக்ஸர்கள் அடித்த கெயில், 40 சிக்ஸர்களுடன் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார். (இந்திய வீரர்களில் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - சச்சின் டெண்டுல்கர், 27 சிக்ஸர்கள்.)

நேற்றைய ஆட்டத்தில் அரை சதம் அடித்தார் கெயில். இது அவருடைய தொடர்ச்சியான 6-வது ஒருநாள் அரை சதம். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 6 அரை சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கெய்லும் இணைந்துள்ளார். கெய்லோடு சேர்த்து 7 வீரர்கள் தொடர்ச்சியாக 6 அரை சதங்கள் எடுத்துள்ளார்கள்.  

இதைவிடவும் அதிகமுறை அரை சதம் எடுத்த வீரர்/வீரர்கள் யாராவது உண்டா? தொடர்ச்சியாக 9 அரை சதங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் ஜாவத் மியாண்டட். 1987-ல் அவர் நிகழ்த்திய சாதனையை யாராலும் தாண்டமுடியவில்லை. அடுத்த ஆட்டத்தில் கெயில் அரை சதம் எடுத்தால் 7 அரை சதங்களுடன் தனி வீரராக 2-வது இடத்தைப் பிடிப்பார். (தொடர்ச்சியாக அதிக அரை சதங்கள் (5) எடுத்த இந்திய வீரர்கள் - சச்சின் டெண்டுல்கர், டிராவிட், கோலி (இருமுறை), ராஹானே.)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com